Search This Blog

Sunday 31 March 2019

நூலாயுதம் ; நூல் ; ராமநாதபுரம் வரலாற்று குறிப்புகள்


                         நூலாயுதம்

நூல் ; ராமநாதபுரம் வரலாற்று குறிப்புகள்    

ஆசிரியர் = முனைவர் எஸ்.எம்.கமால்
வெளியீடு - காவ்யா

     வரலாற்று தேடுதல் உள்ளவர்களுக்கு எஸ்.எம்.கமால் அறிமுகமானவரே. இவர் தொகுத்த சேதுமன்னர் செப்பேடுகள் தொகுதி வியக்க வைக்கும். அந்த வரிசையில் இவர் எழுதிய ராமநாதபுரம் வரலாற்று குறிப்புகள் நூல் வியக்கவைக்கவில்லை என்றாலும் தகவல் ''பெட்டி'' என்று சொல்லலாம். நூலுக்கு மதிப்புரை வழங்கிய குன்றகுடி அடிகளார் பாராட்டு பத்திரம் வாசித்திருந்தாலும், மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர். முனைவர் இ. முத்தையா நூலில் ஆழம் இல்லை என தனது வருத்தை 'கொட்டி' மதிப்புரை தந்துள்ளார். இருப்பினும் இந்நூல் புகுமுக வரல்லாற்று தேடலுக்கு சிறந்த ''கைகாட்டி'' என்றே சொல்ல வேண்டும்.

       பாண்டியநாடு என்றவுடன் பலரும் ராமநாதபுரத்தை மறந்து விடுவார்கள். ஆனால் அதுதான் பாண்டிய மண்டலத்தின் கரு என்பதை துவக்கத்திலே முத்திரை பதிக்கும் இந்த நூல், வையை என்ற வைகை பாசனத்தை துவக்குவது ராமநாதரபுரம் எல்லையில் என்பதை குறிப்பிட்டுள்ளார். ராமநாதரபும் வணிக்கத்தால் வளமுற்று இருந்ததால் சோழ சேர வாணதீயார், ஆற்காடு நவாப் வலாஜா மன்னர்கள், நாய்ககர் என பலரும் போர் தொடுத்து பல்லாண்டுகள் கையப்படுத்தி வைத்திருந்ததில் துவங்கும் இந்த நூல் தனது வரலாற்று பயணத்தை மானுடவியல் பக்கமாக திருப்புகிறது.

        இந்தியாவில் முழுவதுமுள்ள 52 சக்திபீடங்களில் தளங்களில் முக்கியமானதானக கருதப்படும் தேவிபட்டினம் குறித்த செய்தி பிரமிக்க வைக்கிறது. பாண்டிய மண்டலத்தை பிடித்த சோழ அரசன் அருள்மொழித்தேவன் (ராஜராஜன்) தனது காமக்கிழத்தியான உலகம்மைதேவியின் பெயரில் பட்டினம் கடற்கரை அருகில் கோவில் அமைத்தான். அது உலகம்மைதேவிபட்டினமாக இருந்து இன்று தேவிபட்டினமாக சுறுங்கி உள்ளது என்பதை சான்று அளிக்கிறது. அதே போல் பட்டினம் என்ற இடம் மிகப்பெரிய கடல்வணிக்கத்தளமாக விளங்கியது. இங்கு கிறித்தவத்தை உலகம் முழுவதும் பரப்பிய காண்டினோண்டோ, உலகப்பயணி மார்கோபோலோ, இசுலாம் மார்க்கத்தை பரப்ப வந்த நபிகளின் ஐந்தாம் வாரிசான ஆபீஸ், காபில் (அடக்கத்தளம்), தில்லி சுல்தான் குர்சத்கான், விஜயநாகர மன்னன் புக்கன், திருப்புல்லானி பெருமாள் கோவில் வரை படையெடுத்து வந்து அக்கோவிலுக்கு தானம் கொடுத்த செய்தி என்பதை உலகலாகவிய குறிப்புகளில் வியப்பூட்டுகிறது. அதே போல் 13ம் நூற்றாண்டில் ஆண்ட பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகரன் அமைச்சரவையில் கடல் வணிகத்திற்காக சீராஸ்ஹுதீன் என்ற இசுலாமிய அமைச்சர் இருந்தார் என்றும் அவர் தொண்டியில் தங்கியிருந்தார் என்ற செய்தி, போர்த்துகீச்சியர்களுக்கு காசர்கோடுக்கு அடுத்து மய்ய தளமாக ராமேசுவரம் தீவு விளங்கியது என்ற தகவல் வியப்பூட்டுகிறது.

      தென்னத்தில் கிறித்தவத்தை பரப்ப வந்தவர்களில் முக்கியமான்வர் டி.நோபிளி, அடுத்து அபேதுபே இவருக்கு அடுத்து ஜான்.டி.பிரிட்டோ. இவர் மதப்பிரச்சாரத்தில் கொள்ளப்பட்டது இந்த மண்ணில் தான்.

    நாயக்கர் அரசியலில் ஆந்திராம் கருநாடகம் வடபகுதியிலுந்து வந்த மக்கள் முதலில் தங்கவைக்கப்பட்ட இடம் ராமநாதரபுரம் சீமை என்ற நுண்ணிய தகவல். ராமநாதபுர மன்னர்களின் காதலால் புதுக்கோட்டை பிறந்த செய்தி. இதைத்தவிர அந்தப்பகுதியில் நடந்த சாதிய மோதல்கள் குறித்த தகவல், சுந்தரப்போராட்டத்தில் திருவாடனை நீதிமன்ற எரிக்கப்பட்ட செய்தி அதில் பட்டியல் சாதிகளாக அறியப்படும் பள்ளர், குறவர், பறையர் குலத்தில் நூற்றுக்கு மேல்பட்டோர் கலந்து கொண்ட பெயர் பட்டியல். 

        நாயக்கர் ஆட்சியின் கடைசி வாரிசான குமார பங்காரு திருமலை நாயக்கன் சிவகங்கையில் பதுங்கியிருந்த போது அவருக்கும் சிவகங்கையை ஆண்ட வாரிசுகள் உதவியது. மதுரையை மய்யமாக வைத்து மீண்டும் அரசாட்சியை துவக்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்கு சிவகங்கை சீமை உதவுகிறது என்ற பயத்தால் பிரிட்டீஷார் மிகப்பெரிய போர் தொடுக்கிறார்கள். இதுவே சுதந்தரப்போராட்டத்தின் துவக்கமாக அடித்தளமிடுகிறது. இந்த போரினால் சிதைந்த சிவகங்கை சீமையின் படைதளபதியான மருது சகோதர்களுக்கு அடைக்களம் கொடுத்த கன்னிவாடி, எரியோடு, விருப்பாச்சி பாளையங்களை அழித்து ஒழிக்கிறது பிரிட்டீஷ் அரசு இப்படியான தகவல்கள். 

   இன்று ஆட்சியாளர்கள் ஊர் பெயர்களை மாற்றுகிறார்கள். ஆற்காடு நாவாப் ராமநாதபுரத்தை 'அலி' என்று பெயர் மாற்றிய செய்தி, வியாபாரம் மற்றும் மார்க்கநெறி பரப்ப வந்த  இசுலாமியர்கள் பாண்டியமன்னர்களுடன் போர் புரிந்தது வென்ற செய்தி. இதையெல்லம விட பல சாதிய கூறுகளை பட்டிலிட்டு கொடுத்துள்ளார்.
 
     ஜல்லிக்கட்டி, ஏர்தழுவுதல் மஞ்சுவிரட்டுக்கு 1955ல் தேவகோட்டையை சேர்ந்தவர் நூல் எழுதியது.  
  
    இன்றும் ஏரும் போரும் என்று கிண்டலாக சொல்லுவார்கள் கண்டதேவி கோவில் பிரச்சனையை. இக் கோயில் தேரோட்டம் பள்ளர் மறவர் சாதி மோதலாகவே முடிகிறது. இது சுமார் ஆயிர்ர்ம் ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சனை என்றும், அங்குள்ள கல்வெட்டு 800 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி சாதிய கூறுகள் ஆழமாக இருந்தது என்பதை காட்டுவதை வருத்தப்பட பதிவிட்டுள்ள ஆசிரியர், இது குறித்து வெளி வந்த ''தேரும் போரும்'' என்ற நூல் எழுதிய தகவலையும் விட்டு விடவில்லை.
   
          ராமநாதபுரம் மாவட்ட குறிப்பேடு (கெசட்டியர்) வாசித்தவர்களுக்கு சாதரணமாக இந்த நூல் தெரியலாம் ஆனால் அதில் விடுபட்ட பல சயம, சாதிய தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது. எளிய எடுதுக்காட்டு கச்சதீவை இந்தியா இலங்கைக்கு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தை போகிற போக்கில் சொல்லியுள்ளார் ஆசிரியர். நூலில் யார் மனமும் புண்படாமல் மேலோட்டமாக எழுதியுள்ளதால் ஆழமில்லாதது போல் தெரியும். ஆனால் இந்த நூலினை அடிக்குறிப்பாக வைத்துக்கொண்டால் பல தேடல்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக அமையும் என்பது எனது நம்பிக்கை. 
      
 

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...