Search This Blog

Thursday 28 March 2019

மொழியை இழந்தால் இனம் அழியும்



                                     
                                                      
                                                                 
                                                               மொழியை இழந்தால் இனம் அழியும்

                                                              











மொழி என்பது ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பரிமாறிக்கொள்ளும் சமிஞ்கை மட்டும் இல்லை. அதனுள் விஞ்ஞானம், கலை, அறிவு, பண்பாடு என அனைத்தியயும் புதைத்து வைத்து தேவையான போது எடுத்துக்கொடுக்கும்.

ஒரு மொழி அழிந்திடும் போது அல்லது மற்றொரு மொழி மேலாதிக்கம் செழுத்தும் போது நமது மொழியில் உள்ள அனைத்தும் பின்னும் தள்ளப்படும்.

எளிய எடுத்துக்காட்டு

பண்டுவம் (வைத்தியம் = சமற்கிருதம்) தமிழ் மொழியின் கொடை. நாம் மொழியை பின்னுக்கு தள்ளியதால் வேற்று நாட்டு பண்டுவம் நம்மை ஆளுமை செய்கிறது. தமிழ் நாட்டு பண்டுவத்தில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கலாம். அதற்காக முழுமையாக நிராகரிக்க இயலாது. நிராகரிப்பதாக இருந்தால் உப்பு போட்டு கஞ்சி காய்ச்சுவதிலிருந்து, நல்லெண்ணை ஊத்தி கடுகு போட்டு தாழிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியது தான்.


கட்டிடக்கலை.


தமிழகத்தில் குறிப்பாக திராவிடப்பகுதி, அதனை ஒட்டியுள்ள தென் இந்தியாவில் மட்டுமே கடுக்காய் காசிக்கட்டி, கருப்பட்டி சுண்ணாம்பு சேர்ந்த கலவையில் கட்டிடம் கட்டுயுள்ளார்கள். இந்த விஞ்ஞானத்தை புறம் தள்ளியதால் வந்த வினையே இன்றைய இயற்கை அழிப்பு என்ற பார்வையும் உண்டு. இதை விட மய்யமாக பார்க்க வேண்டியது குசராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது சிமிண்டால் கட்டப்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமானது. ஆனால் கடுக்காய் காசிக்கட்டி, கருப்பட்டி, சுண்ணாம்பு இவைகளால் கட்டப்பட்ட அதாவது மாநகராட்சி அலுவலகம் அலுவர்கள் சோதித்து அனுமதி வாங்காத கொடுக்காத இருநூறு ஆண்டு கால பழைய கட்டிடங்கள் சிறுசிதிலத்தைக்கூட அடையவில்லை. இதனை கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொழில் நுட்ப மய்யம் (IIT) ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக புனேயில் உள்ள இந்திய துணைக்கண்ட படைத்துறையின் (ராணுவ) கீழ் இயங்கும் பல்கலைகழகம் செய்த ஆய்வின் ''கடுக்காய் காசிக்கட்டி, கருப்பட்டி சுண்ணாம்பு கலவையைப் பயன்படுத்த வேண்டும்'' என்ற முடிவினை மய்ய அரசுக்கு அனுப்பி உள்ளது.

கலையின் மய்யமான சிலை.

                                                                    



 ஒன்பது 12, 13ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு வந்த பிராஞ்சு கலைஞர்கள் தென் இந்திய கோவில்களில் உள்ள சிலை நுட்பங்களையும், சிலைக்காக தேர்வு செய்த கற்கள் குறித்ததை மிரட்சியுடன் பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் சிலை செய்திட தேர்வு செய்திட என்ன நூல் கையாளப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றே பதிவிட்டுள்ளார்கள். (சான்று தென் இந்திய கோவில்கள் சந்தியா பதிப்பகம் ஆசிரியர் சீனிவாசன் , இந்திய வரலாறு இரண்டாம் பாகம் ஆசிரியர் - வின்செண்ட் ஸ்மித்) . இந்த சிலை செய்திடும் தென்நூல் தமிழிலிருந்து சமற்கிருதமாக்கப்பட்டு அதில் ஆன்மீக கலப்பு ஏற்ப்பட்டு அவை முடக்கப்பட்டது.




                                      சதிராட்டம்     
                                   


இதை 19ம் நுற்றாண்டின் இறுதியில் பரதநாட்டியம் என பெயரிட அதுவே தற்போது பொது சொல்லாக்கப்பட்டுள்ளது. சதிராட்டம் குறித்து சிலப்பதிகாரத்திலும் அடுத்து வந்த காரைக்கால் அம்மையாரின் பதிகத்திலும் அதி நுட்பமாக உள்ளதாக தமிழ் அறிஞர் பலரும் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் இந்த சதிராட்டம் அழிவுக்கு காரணம் கோவில்களில் தேவரடியார் தடைசட்டத்தால் என்ற பார்வையை வைக்கிறார்கள். மெய்யாகவே தமிழை பின்னுக்கு தள்ளியதால் வந்த வினையே என்பதை நாம் பார்க்க மறுத்ததாகவே புலப்படுகிறது.


கப்பல் கட்டுமானம் கடல் பயணம்


பல வைணத்தளங்களில் கப்பல், துடுப்பு, படகு, புடை சிற்பங்கள் இருப்பதைப் பார்க்கலாம். இவையெல்லாம் கடலை கைக்குள் வைத்திருந்த முன்னோர்களின் மூலை. இது போன்ற அறிவு மொழியிலே புதைந்து கிடைக்கிறது.

சொற்ப எடுத்துக்காட்டாகச் சொன்னால் பத்து ரூபாய்க்கு ஆங்கில திரைப்பட குறுந்தகடு விற்பது அந்த மொழியை அவர்கள் விதைத்து, காத்து வருதால் என்பதை நாம் உள்வாங்காத வரை தனது சுயத்தை இழந்துகொண்டே போகும்

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...