Search This Blog

Wednesday 10 April 2019

மதங்கள் எதை நோக்கி பயணிக்கிறது


   
                                             மதங்கள் எதை நோக்கி பயணிக்கிறது

                           

மத்திய ஆசிய மேற்கு ஐரோப்பிய புரட்சிக்கும் மானுட வளர்சிக்கும் மதங்கள் செய்த பங்கு உண்டு. ஆனால் இந்தியாவில் மதங்கள் எதை நோக்கி பயணிக்கிறது பயணித்தது.

இந்தியாவில் தோன்றிய மதங்களுக்கும், மத்திய கிழக்கில் தோன்றிய மதங்களுக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாடுகளை கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய மதங்கள் ''சமூக மேம்பாடு பற்றியோ ஒரு இனத்தை குழுவைவை சார்ந்த மேம்பாடு பற்றி கவலை படுவதில்லை. அது அவரவர் ''கர்மா'' வினை என்று ஒதுக்கி தள்ளி விட்டு 'தனி மனித முக்தி, நிர்வாணம்,ஆன்மீக அனுபவம்'' (அதான் அவன் கண்ணுக்கு மட்டும் கடவுள். தரிசனம் கொடுத்ததாக சொல்லுவது பிதற்றுவது) என்பது தான் மனிதனின் இறுதி இலக்கு என்கின்றன. 

இது மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் இணைப்பதற்கு தடையாகும். மாறாக மதிய கிழக்கில் தோன்றிய மதங்கள் இனத்தின், குழுக்களின், தேவைக்காக உருவானவை. யூத மதம் அந்த இனத்தின் ஆதிக்கத்தை நிறுவ உருவானது. (அதனால் தான் உலகில் பொருளாதர பின்புலம் உள்ள மக்களில் பெரும்பான்மயோர் யூதர்களே) கிறித்து (ஏசு) தன் மக்களுக்காக அதிகாரம் செழுத்தியவர்களுக்கெதிராக போராடியவர் என்று சொல்லப்படுகிறார். முகம்மது ஒரு குழுவின் தலைவர்.

இதனால் தான் இந்த மதங்கள் பரவிய நாடுகளில் வெகு ஜன புரட்சி சாத்தியமாகியது. அவை வெவேறு திசையில் பயணித்தாலும் அவை ஒட்டுமொத்த மக்களுக்காக நடவடிக்கைகளே.

ஆனால் இந்தியாவில் தோன்றிய மதங்கள் அரச மதங்களாக இருந்த சைவம் / சமணம் / வைணவம் / (பவுத்தம் ஓரளவிற்கு அறிவு மதமே) இவைகள் மக்கள் குறைந்தபட்சம் கலகத்தை கூட செய்வதை தடுக்கிறது ஆக இந்தியாவில் புரட்சி / மாற்றம் குறித்து பேசுபவர்களில் அறிவுசார் வட்டங்களான ஆயுத குழுக்களை தவிர மற்றவர்கள் இந்த கோணத்தை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை என்பது தற்போதைய நிலை

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...