Search This Blog

Saturday 13 April 2019

எது தமிழ் புத்தாண்டு ?





                          எது தமிழ் புத்தாண்டு ?

  
செல்வி ஜெயலலிதா ஆட்சியின் பார்பனிய புகுத்தலை பலரும் எதிர்த்து எழுதினார்கள். இந்த எதிர்ப்பினை அவ்வப்போது எழுதி நினைவு படுத்த வேண்டிய தேவை என்பதால் நினைவூட்டலாகவே இதை கருத வேண்டுகிறேன்.இந்த பதிவிற்கு திராவிடத்தை எதிர்க்கும் குழு இயக்கத்தினர் ஏதாவது மறுப்பு இருந்தாலும் வரவேற்கப்படுகிறது.

சாலிவாகனன் அல்லது சாதவாகன் என்பவன் வடபுலம் ஆகிய நடுவட இந்தியவில் ஆட்சிசெய்த ஒரு மராட்டிய மன்னனாவான். அவன் தன் பெயரில் ஒரு ஆண்டுமுறை ஏற்படுத்தி வழங்கச் செய்தான். அதற்குச் சாலி வாகன சகம் அல்லது சகவருஷம் எனப் பெயர். அது முற்றிலும் அறுபது ஆண்டளவு கொண்டுள்ள வியாழமானத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.

*சகவருடத்தின் முதல் மாதம் 'சைத்ர' ; அதையே தமிழாண்டிலும் சித்திரை என்று இடைச்செருகிவிட்டனர். இந்த ஆண்டு முறையே பிற்காலத்தில் தென்னாட்டுத் திரவிட மற்றும் சோழ பாண்டியர்களாகிய தமிழ் வேந்தர்களும் பயன்படுத்தலாயினர்.

பழந்தமிழர் முறையும் ஆரிய முறையும் கலந்துபோன நிலையிலான விழாமுறையே கடைச்சங்க காலத்தையொட்டிய சோழர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. மழை வளம் பெற்ற சோழநாட்டில், வேந்தன் அல்லது இந்திரன் கதை முற்றிலும் நீர்வளத்தையும் அதைத் தருகின்ற மழையையும் பற்றி புனைந்துரைகபட்டது. ஆகவே, அதன் காரணமாக சித்திரைப் புத்தாண்டை முன்படுத்தி மேற்கொண்டனர் சோழர்கள்.

பிற்காலத்தில் வல்லாளுமை முறையில் ஆரிய வழியினர் பல்லவர் கால முதல் இன்று வறை சித்திரையைப் புத்தாண்டாக தம் வயப்படுத்திகொண்டனர். ஆரிய வழியினரக்கு தமிழகத்து ஆட்சியாளர்கள் கவசமிட்டுக் காவலாக இருந்து தான் அவர்களின் எதிர்ப்பில்லாத வெற்றிக்கு காரணமானது.

தை முதல்நாள் தொடக்கம் திருவள்ளுவராண்டு. இதுவே ஆதிமுதல் வந்த தமிழ்ப் புத்தாண்டு. சித்திரை முதல்நாள் இது இடக்காலத்தில் ( கி. மு. 317ஆம் ஆண்டுக்குப்பின் ) தமிழ்ப் புத்தாண்டாக நடைமுறைப்பட்டது.*

இதற்கு முன்னர் தொல்காப்பியர் காலத்தில் (கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குச் சற்று முன்னும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வரையிலும்) ஆவணி முதல்நாளில் தமிழ்ப்புத்தாண்டு கொள்ளப்பட்டிருந்துள்ளது.

ஆவணி முதல்நாளை விட்டுவிட்டுச் சித்திரை முதல்நாளை ஏற்றுக்கொண்ட முறை இளவேனில் காலத்தையொட்டியதாகும். மேலும், அதற்கேற்ப ஐந்திரமும் (பஞ்சாங்கமும்) மேழ (சித்திரை) ஒரையிலிருந்து தொடக்கப்பட்டிருக்கிறது.
(இன்றும் அப்படித்தான் தொடர்கிறது). ஆகவே, தமிழர்களுக்குப் புத்தாண்டு தை முதல் நாளே ஆகும். இதற்குரிய சான்றுகள் ஏராளம் உள்ளன. இலக்கிய நூல்களிலும் சான்றுகள் உள்ளன. 1921ஆம் ஆண்டில் 500 தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவும் மேலும் ஒரு சான்றாகும்.

சித்திரைப் புத்தாண்டு இடையில் தமிழர்களிடையே நுழைந்துவிட்டது என்பதே உண்மை. சித்திரை புத்தாண்டாக இருக்கலாம். ஆனால் அதனைத் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வது வரலாற்றுப் பிழையாகும்.

கருணாநிதி தை மாதத்தினை ஆண்டின் துவக்கமாக அறிவித்ததால் வேப்பங்காயாக கசக்கும். எப்படியோ தையே ஆண்டின் துவக்கம் என்பதற்கு சான்றுகள் பல நூறு உள்ளன. இனியாவது தை மாதத்தினை ஆண்டின் துவக்கமாக கொண்டாடுவோம்.


                                                      மடங்கள் ;
சித்திரையை ஆன்மீகத்திற்குள் கொண்டுவந்து மக்களை ஆட்டிவிக்கும் வித்தைகளின் வடிவம். அரச மரபில் சட்டங்களை நம்பிக்கைக்குள்ளே திணித்து மக்களிடம் பரப்பினார்கள். அதனால் தான் சட்டங்கள் சமூக சட்டமாக நம்பிக்கைகளாக இன்னும் இந்த நாட்டில் உள்ளது. சட்டம் இருக்கவே சமூக சட்டம் இருப்பது கொடுமைதானே அதனல தான் சித்திரையை கூட பலரும் ஆதரிக்கிறார்கள்.

                                                         நம்பிக்கைகள் 
சித்திரை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாள். பூமியை பிரம்மா படைத்த நாள் என்று பகவதப் புராணம் சொல்கிறது.சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சித்ரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும். இதே நாளில் உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் ஆயுள் பலன் கூடும். பரணி நட்சத்திர நாளில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடைகள் விலகும். அன்று பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் படைத்தால் எதிரி பயம் நீங்கும். சித்திரை மாத மூல நட்சத்திர தினத்தன்று லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும். சித்திரை மாத சுக்லபட்ச திரிதியை அன்று சிவபார்வதியை வணங்கி, தானங்கள் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம். 
சித்திரை நாள் தமிழகம் மட்டுமல்ல கேரளாவில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கால் துட்டு கொடுத்த வழக்கம் தற்போது ஒரு ரூபாய் நாணயம் வழங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதற்கு கை நீட்டம் என்று பெயர். (சான்று இந்துக்கள் பண்பாடும் பழக்க வழக்கமும் நூலாசிரியர் ஆசிரியர் அபேதுபே.) கேரள மன்னர்கள் பிறந்த மாதத்தை சேர்த்தே தங்களது பெயர்களில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு அங்கு பார்ப்பனியம் பரவியிருந்தது. எ.கா சித்திரை திருநாள் மன்னர்.

மதுரையை மய்யாமாக வைத்து ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சியில் சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் விழாவாக மீனாட்சி திருக்கல்யாணம் துவங்கப்பட்டது. இது சித்திரையில் கொண்டாடுவதால் மக்களிடம் சித்திரை பதிர்ந்து விட்டது. இந்தச் சித்திரை விழாவில் கலந்து மீனாட்சி கல்யாணத்தைப்பார்த்தால் பாம்பு கடிக்காது என்பது நம்பிக்கை. 
சித்திரை மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்கும் உழுகுடிகளுக்கு உழுதிட நிலம் மானியமாக வழங்கப்பட்ட சான்றுகள் ஏராலமாக உள்ளது.
சிலப்பதிகாரத்தில் பூம் புகாரில் இந்திர விழா, சித்ராபவுர்ணமி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கும் சித்திரைக்கும் தொடர்பு உண்டா எனத்தெரியவில்லை. இறை நம்பிக்கையை வைத்தே அரசு எந்திரம் நடந்தது. அன்றைய கால்ங்களில் மடங்களே ஆய்வகமாக இருந்ததால் மடத்தலைவர்களின் சிந்தனையே அரசனின் அதிகார வார்த்தையாக வந்திருக்கும் என நம்பலாம்.

சித்திரையை வரவேற்பவர்களின் வாதங்கள்;

இளவேனில் கால ஆரம்பமே புத்தாண்டின் துவக்கமாகும். உலகத்தின் எல்லா பண்டைய நாகரிகங்களும் இளவேனில் துவக்கத்தை தான் புத்தாண்டாக கொண்டாடின. தமிழ் நாள்காட்டி ? (பார்பன)சூரியனை அடிப்படையாக கொண்டது. பூமி சூரியனைச் சுற்றிவரும் சுற்றுபாதை (360 பாகை) பன்னிரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு பாகங்களுக்கும் ஒவ்வொரு ராசிகள் பகுக்கப்பட்டுள்ளன. அந்தந்தக் காலக்கட்டத்தில் வானில் தென்படும் விண்மீன் கூட்டங்களின் (ராசிகள்) அடிப்படையில் இவை பெயரிடப்பட்டுள்ளன. தமிழ் நாள்காட்டியில் பன்னிரண்டு மாதங்களும் ஏழு கிழமைகளும் அமைந்துள்ளன. இந்த பன்னிரண்டு மாதங்களும் பன்னிரண்டு ராசிகளை அடிப்படையாக கொண்டவை. அதேபோல ஏழு கிழமைகளும் நவகிரகங்களில் ஏழு கிரகங்களை அடிப்படையாக கொண்டவை.
|| பன்னிரு மாதங்கள் ||
1) சித்திரை - மேஷம்
2) வைகாசி - ரிஷபம்
3) ஆனி - மிதுனம்
4) ஆடி - கடகம்
5) ஆவணி - சிம்மம்
6) புரட்டாசி - கன்னி
7) ஐப்பசி - துலாம்
8) கார்த்திகை - விருச்சிகம்
9) மார்கழி - தனுசு
10) தை - மகரம்
11) மாசி - கும்பம்
12) பங்குனி - மீனம்
|| ஏழு கிழமைகள் ||
1) திங்கள் – சந்திரன்/நிலவு
2) செவ்வாய் – செவ்வாய் கிரகம்
3) புதன் – புதன் கிரகம்
4) வியாழன் – குரு கிரகம்
5) வெள்ளி – வெள்ளி கிரகம்
6) சனி – சனி கிரகம்
7) ஞாயிறு – சூரியன்
நவகிரகங்களும் நட்சத்திரங்களும் இந்துதர்ம நூல்களை அடிப்படையாக கொண்டவை. இந்துதர்மமும் தமிழ்க் கலாச்சாரமும் வெவ்வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ‘இந்து புத்தாண்டு’ என்று எதுவுமில்லை. இந்து என்பது இந்திய கலாச்சாரங்களையும் நம்பிக்கைகளையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். தெலுங்கர்களும் கன்னடர்களும் சித்திரை முதல் நாளைத் தான் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். அதேபோல மலையாளிகளும் சித்திரை முதல் நாளைத் தான் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.
தாய்லாந்து, கம்போடியா, மியான்மார், லாவோஸ் ஆகிய நாடுகளிலும் புத்தாண்டு சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 13, 14 அல்லது 15) அனுசரிக்கப்படுகின்றது. தாய்லாந்து மற்றும் கம்போடியா தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
|| தமிழ் இலக்கியங்கள் ||
நக்கீரர் நெடுநல்வாடை எனும் சங்க இலக்கிய பாடலின் 160-162 ஆம் வரிகளில், சூரியன் மேழ (மேஷ) ராசிக்கு சஞ்சரிக்கும் நாள் தான் ஆண்டின் துவக்கம் எனக் குறிப்பிடுகின்றார். கூடலூர் கிழார் எனும் புலவர் புறநானூற்றின் 229-ஆம் பாடலில் சித்திரை மாதம் தான் ஆண்டின் துவக்கம் என குறிப்பிடுகின்றார். அதேபோல, தொல்காப்பியம் ஓர் ஆண்டை ஆறு பெரும்பொழுதாக பகுத்து அதில் இளவேனில் பருவத்தை முதலாக காட்டுகின்றது. சித்திரை-வைகாசி ஆகிய இரண்டு மாதங்களும் இளவேனில் பருவம் ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பன்னிரண்டு மாதங்களையும் அவற்றுள் முதல் மாதமாக சித்திரை இருப்பதையும் தெளிவாக விளக்குகின்றது.
|| 60 ஆண்டுகள் ||
சித்திரை தமிழ்ப்புத்தாண்டை மறுப்பவர்கள் முன்மொழியும் முதல் வார்த்தை 60 ஆண்டுகளின் பெயர்களும் தமிழில் இல்லை என்பதே. ஆனால் சித்திரை, வைகாசி போன்ற மாதங்களின் பெயர்கள் கூட தமிழ்மொழி கிடையாது. தமிழும் சமஸ்கிருதமும் பாரதநாட்டின் பண்டைய மொழிகள். எனவே இவையிரண்டும் ஒன்றோடு ஒன்று நிறைய சொற்களைப் பரிமாறிக் கொண்டுள்ளன. சூரிய சித்தாந்த நூலின் அடிப்படையிலே 60 ஆண்டுகால சுழற்சி உருவாக்கப்பட்டது. இதேபோன்ற 60 ஆண்டுகால சுழற்சி சீன நாள்காட்டியிலும் பயன்படுத்தப்படுகின்றது. இதை ”சேக்ஸாஜெனரி சைக்கல்” என வானியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
60 ஆண்டுகளுக்கு ஒரு முறை வியாழ கிரகமும் சனிக் கிரகமும் நேர்கோட்டில் சந்திக்கும். ஜோதிட முறையில் இது முக்கியமான ஒன்றாகும். எனவே 60 ஆண்டுகால சுழற்சிகள் அனுசரிக்கப்படுகின்றன. பிரபவ எனும் ஆண்டு பெயரில் தொடங்கி அட்சய எனும் ஆண்டு வரை 60 ஆண்டு பெயர்கள் உள்ளன. இந்த 60 ஆண்டுகளின் பெயர்களும் வெற்றி, மங்கலம், இனிமை, அன்பு போன்ற பண்புப்பெயர்களை கொண்டுள்ளன. இவை அடையாளப் பெயர்களாக உள்ளன. சீன நாள்காட்டியில் மிருகங்களின் பெயர்களைக் கொண்டு இந்த 60 ஆண்டுகால சுழற்சியை நிர்ணயிக்கின்றனர்.
|| அயனம் ||
ஓர் ஆண்டு இரண்டு அயனங்களாக பகுக்கப்பட்டுள்ளது. தட்சிணாயனம் மற்றும் உத்தராயணம். பூமியின் மேற்பரப்பில் இருந்து நோக்கும் போது, சூரியன் சற்றே தெற்கு நோக்கி இருக்கும் காலவரை தட்சிணாயனம் என்றும் சற்றே வடக்கு நோக்கி இருக்கும் காலவரை உத்தராயணம் என்றும் அறியப்படுகின்றது. தை முதல் ஆனி வரை தட்சிணாயனம் ஆகும், ஆடி முதல் மார்கழி வரை உத்தராயணம் ஆகும்.
உத்தராயணம் பிறந்த நாளைச் சங்க்ராந்தி (மகர சங்க்ராந்தி/தை முதல்நாள்) என்று கூறுவார்கள். சூரியன் மகர ராசிக்கு சஞ்சரிக்கும் நாளாகும். அன்றைய நாள் ஒரு புண்ணிய தினமாகும். சங்க்ராந்தியை ஒட்டி அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கி, அன்றய தினம் பொங்கல் செய்து சூரிய தேவனுக்கு நைவேத்தியம் செய்வது (படைப்பது) மிகவும் விசேஷமாகும். அதற்கு மறுநாள் இந்த நெல்லைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளான மாட்டுக்குப் பொங்கல் செய்து படைப்பது மிகவும் விசேஷமாகும். இதுவே மாட்டுப் பொங்கல் எனப்படும். எனவே “பொங்கல்” எனப்படுவது இயற்கைக்கு நன்றி கூறும் நன்னாளாகும். உலகின் பெரும்பாலான கலாச்சாரங்களில் இயற்கைக்கு நன்றிகூறும் நாள் ஓர் ஆண்டின் இறுதியில் தான் அனுசரிக்கப்படுகின்றது.
தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு பொழுது எனவும், உத்தராயணம் பகல் பொழுது எனவும் கூறப்படுகின்றது. இதனால் உத்தராயணத்தின் 
தொடக்கமான தை மாதம் தேவர்களின் பகல் பொழுது ஆரம்பமாக (காலைப் பொழுது) கருதப்படுகின்றது. இதனால் தான் தை மாதம் மிகவும் மங்கலகரமான மாதமாக அமைந்துள்ளது. இது தான் இவர்களின் வாதம்.


தமிழ் நூல்களும் தமிழறிஞர்கள் ;

தமிழர்கள் இலக்கிய சான்றுகள் அடைப்படையில் காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்துள்ளது தெரிகிறது. அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர். சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்- கோண்டிரடோஸ் எஸ்.ஜி வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், தையே முதற்றிங்கள், தைம் முதலே ஆண்டு முதல்பத்தன்று, நூறன்று, பன்னூறன்,;பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம் முதல்நாள், பொங்கல் நன்னாள் என -பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளான்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. என்பது நிலங்கள் அனைத்தும் கோயில்களுக்கு சொந்தம். நிலத்தினை உழுவடை செய்திட ஆண்டின் இறுதியிலே முடிவெடுப்பது நடக்கும் அந்த அடிப்படையிலே உழுகுடிகளோடு இந்தப்பழமொழி வந்திருக்கலாம்.
சமற்கிருத மாதங்கள்;

பிரபவ , விபவ , சுக்ல , பிரமோதூத , பிரசோற்பத்தி, ஆங்கீரச . ஸ்ரீமுக, பவ யுவ தாது ஈஸ்வர வெகுதானிய, பிரமாதி ,விக்கிரம ,விஷு ,சித்திரபானு , சுபானு ,தாரண , பார்த்திப ,விய ,சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி ,கர நந்தன விஜய, ஜய,. மன்மத. துன்முகி, ஹேவிளம்பி . விளம்பி. விகாரி. சார்வரி. பிலவ. சுபகிருது. சோபகிருது. குரோதி . விசுவாசுவ. பரபாவ. பிலவங்க. கீலக. சௌமிய சாதாரண. விரோதகிருது. பரிதாபி, பிரமாதீச. ஆனந்த. ராட்சச. நள. பிங்கள. காளயுக்தி . சித்தார்த்தி ,ரௌத்திரி. துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன,. அட்சய. இது தான் சமற்கிருத ஆண்டுகள். இந்த ஆண்டுகள் சோதிட அடிப்படையில் அமைந்தது.

மேஷம் இதுதான் முதல் ராசி.சூரியன், மேஷ ராசிக் கட்டத்தில் புகுவது சித்திரை எனவே அது தான் புத்தாண்டு என்னு இவர்கள் வாதம்.
சித்திரையில் தானே மேஷம் புகும். அப்படியென்றால் மேஷம் புகுந்தாந்தான் என்பது பொருள் அதனடிப்படையில் பார்த்தாலும் சிக்கல் வருகிறது. ஒரு இனத்தின், பண்பாட்டின் ஆண்டுப் பிறப்பு ஜோதிட அடிப்படையிலா பிறக்கும்.
சித்திரை இளவேனில் வசந்த காலம் சந்தத்தில்" துவங்குதல் தானே ’மரபு’?-ன்னு இவங்களாச் சொல்ல ஆரம்பிச்சிருவாங்க! ஆனா தரவு? ஆதாரம்? அவர்களிடம் இல்லை.

தொல்காப்பியம்:

இதுதானே தமிழன் முதல் நூல் இதில் ஆண்டு குறிப்பு இல்லை. ஆனால் முதல் பருவமாகத் தொல்காப்பியம் சொல்கிறது. மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன்மேய,மைவரைஉலகமும்,காரும்,மாலையும்,முல்லை,குறிஞ்சி,கூதிர், யாமம் என்மனார் புலவர்! எங்கிறது. கார் காலம் (மழைக் காலம்) தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது.
ஆனா, 10ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய நச்சினார்க்கினியர்... கார்காலமே ஆண்டின் துவக்கம்-ன்னு வெளிப்படையாக் காட்டிச் செல்கிறார். ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை (ஆவணி) முதலாக,
தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக. இவரின் காலம் சமய/ சாதி அரசியலும் கலந்து இருப்பதை பக்தி இலக்கியங்கள் குறிப்பிடுகிறது.
சங்க காலம் - எட்டுத் தொகை/ பத்துப் பாட்டு
பல பாடல்கள்ளில் தைஇத் திங்கள் எனப்பதிவுள்ளது.

நற்றிணை ;

தைஇத்திங்கள்தண்கயம்படியும்பெருந்தோள் குறுமகள்
குறுந்தொகை தைஇத் திங்கள் தண்ணிய தரினும்.

புறநானூறு ;

தைஇத் திங்கள் தண்கயம் போல்
கொளக்கொளக் குறையாக் கூழுடை வியனகர்.

ஐங்குறுநூறு;

நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் போல
கலித்தொகை
தையில் நீராடித் தவம் தலைப்படுவாயோ?. ஆனால் ஆண்டில் துவக்கம் நேரடியாக இவைகள் சொல்லலை.

நாச்சியார் பாசுரம்'

தையொரு திங்களும் தரை விளக்கி
ஐயநுண் மணற் கொண்டு தெரு வணிந்துன்னு, தையொரு திங்கள்.ஆனால் மார்கழியே ஆண்டாள் வைணவர்கள் கொண்டாடுகிறார்கள்.

நெடுநல்வாடை;

திண் நிலை மருப்பின் "ஆடு தலை" யாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து ஆடு தலை , மேஷம் தான் முதல்;
நக்கீரரே சொல்லியுள்ளார் நக்கீரர் . இதன் அடிப்படையில் பார்த்தால் தைதான் ஆண்டின் துவக்கமாக கருதலாம்.

இவையெல்லாம் தாண்டி ஒரு மொழிக்குறியவன் அவனது மொழியின் பண்பாட்டினை மீட்க துவங்கிவிட்டால் அதே மொழிக்குள் எதிர்ப்பாளர்கள் கைக்கூலிகள் இருப்பார்கள். இவர்கள் காலம் தொட்டு வரும் பீடை நஞ்சுகள். தைதிருநாள் கொண்டாட்டம் கூட தமிழ் இலக்கியங்களில் இல்லை தான் ஆனால் முடக்கத்தான்  (உழுங்கை) கொடியை பிடிங்கி பொங்கல் பானையில் சுற்றி வழிப்பட்ட பழக்கம் தமிழனைத்தவிர வேறு எந்த திராவிட குலத்திலும் இல்லை. 

மொழி அதிகாரத்தின் மையப்புள்ளி

 

மொழி அதிகாரத்தின் பிறப்பிடம் என்றே மொழி ஆய்வு அறிஞர்கள் கூறுகிறார்கள்.இதனால் தான் ஆட்சி மொழியை அதிகார மொழி என்பார்கள். கடவுளின் மொழி சமற்கிருதம் என்று இன்றுவரை கட்டிக்காப்பதில் தான் அதிகாரம் மொழியிலிருந்து பிறக்கிறது என்றே சொல்ல முடியும். ஒரு மொழியை அழித்தால் அனைத்தும் அழிந்துவிடும்.



No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...