Search This Blog

Thursday 18 April 2019

நூலதிகாரம் ;; நூல்;தேடித்திரிவோம்வா

                                                                                    நூலதிகாரம்


நூல்;தேடித்திரிவோம்வா.
ஆசிரியர்; திருப்புள்ளாணி அரசுப் பள்ளி மாணவர்கள்.     
தொகுப்பு ; ஆசிரியர் , இராஜகுரு. 

ஆசிரியர் - மாணவர் உறவு, ஏசு , பிளாட்டோ துவங்கி பெரியார் வரை நீள்கிறது. இந்த மாணவர்களே சமூக அரசியல் மாற்றங்களை உருவாக்கியுள்ளனர். ஆசிரியர் - மாணவர் உறவைத் தழுவி எடுத்த ரமணா திரைப்படம் மக்களிடன் ஊடுருவிய வெற்றியை தேடிக் கொடுத்தது. அந்த வரிசையில் ராமாநாதபுர மாவட்டம் திருப்புல்லாணி அரசு பள்ளி ஆசிரியர் ராஜகுரு இவரின் பெயருக்கு ஏற்றால் போல் ராஜகுருவாக செயல்பட்டு நல்ல மதிமந்திரிகளான மாணவர்களை உருவாக்கி வருகிறார். இவர் அடிப்படையில் ஆங்கில ஆசிரியராக இருந்தாலும் கல்வெட்டு ஆய்வில் தேர்ந்து அப்பள்ளி மாணவர்களை படிப்புடன் கல்வெட்டு ஆய்வாளர்களாக்கி விட்டார் என்றே சொல்ல வேண்டும். இவரது வழி காட்டுதலில் இப்பள்ளி மாணவர்கள் திருபுல்லாணி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோயில் கோட்டை, மண், மக்கள் என தரவுகளை சேகரித்துள்ளனர். இந்த சேகரிப்புகள் வெறும் காகிதங்களாக தேங்கி விடாமல் இருக்க இவரது சொந்த பணத்தில் 'தேடித் திரிவோம் வா' என்ற தலைப்பில் அழகிய நூலாக வெளிக் கொண்டு வந்து, மாணவர்களின் செயல்பாட்டை மேலும் தூண்டியுள்ளார்.

இந்த நூலில் மு. அபிநயா கட்டுரை; முத்து வீரப்பன் என்ற மாவீரனின் வீர திர செயல்களை கல்வெட்டு படியுடன் வரலாற்றை கொடுத்துள்ளார். மாணவியின் கட்டுரை விசாலி தனிப்பட்ட முயற்சியில் மரககுளத்து (மீன்) மதகின் இரண்டு பக்கவாட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வரலாறும் அதில் உள்ள கல்வெட்டும் திகைப்பூட்டுகிறது. அதே போல் திருப்புல்லாணி சேது மன்னர்களின் பழையை அரண்மனையாக இருந்ததை என்பதை ஆதாரத்துடன் நிறுவியுள்ள இந்த மாணவி , ஊரில் குல (ஜாதி) வாரியாக குளங்கள் இருந்ததற்கு சான்றுகளை கொடுத்து, இந்த குளங்களுக்கு தண்ணீர் வரத்து கால்வாயான பொன்னாங்கழிக்கானல் கால்வாயினை திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரத்தை சான்றாக வைத்து அசத்தியுள்ளார். 

பானுமுத்துப்பிரியா என்ற மாணவி தனது ஊரான பள்ளபச்சேரியில் உள்ள கோவிந்தன் கோயிலில் ஐந்து கழுமரங்கள் இருந்ததை கண்டுபிடித்து பதிவிட்டுள்ளார். இந்த ஊருக்கு பல ஊர்களிலிருந்து பள்ளர் குலமக்கள் வந்து சேர்ந்துள்ளனர். இதற்கு சான்றாக அந்த மக்கள் தங்கள் குல தெய்வத்தை பிடிமண் எடுத்து வந்து கோயிலாக நிறுவியதை விளக்கும் மாணவி, பிடிமண் எடுத்து வர வேண்டிய தேவை அங்கு நிலவிய குல ஆதிக்க மன நிலையையும் விளக்கியுள்ளார். 'கட்டுசோறு கட்டி காதவெளி போறோம்' என்ற சொலவடை கோவிந்தன் கோயிலில் பாடலாக உள்ளதை பதிவிட்டுள்ளார். இந்த பாடல் சாதரணமாகப் பதிவிட்டிருந்தாலும் அரச மரபில் குடிகளின் 'கொடூர' வாழ்க்கையை சொல்லும் வரலாறு என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு புரியும். 

நஸ்சிரியா பானு என்ற மாணவி தனது ஊரான கீழப்புதுக்குடியில் நடந்த நிகழ்வை கைக்கோளர் ஆமினா என்ற தலைப்பில் வரலாற்றை எளிமையாக சொல்லியுள்ளார். ஆமீனாவின் வரலாற்றை படிக்கும் போது நம்ககு கண்ணீர் சுரக்கிறது. மன்னர் ஆட்சியில் குடிகள் எப்படியெல்லாம் கொடுமைக்கு ஆளானார்கள் என்பதற்கு ஆமினா என்ற இளம்பெண்ணே சான்றாக பதிவிட்டுள்ளார்.இந்தப்பள்ளி மாணர்களுக்கு கல்வெட்டு படிக்க படியெடுக்க பயிற்சி கொடுத்துள்ளார்கள் என்பதை நூலில் உள்ள படங்களே சான்றாக உள்ளது. 

பள்ளி மாணவர்கள் தரவு என இந்த நூலை பார்க்க முடியவில்லை. பாண்டிய மன்னர்கள் இசுலாமிய மக்களுக்கு வழங்கிய கொடைகள், நீர் நிலைகளின் வரலாறு, அந்த நீர் நிலைகள் குறித்த இலக்கிய சான்றுகள், கிணறுகள், கோட்டைகள், தாலாட்டுபாடல், இசுலாமியர் தாலாட்டு பாடல், கும்மி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஓலையில் எழுதப்பட்ட மொய் விபரம். அதுவும் நாவிதர் ஒருவர் இறப்பிற்கு பின் நடக்கும் கருமாந்தரத்திற்கு பல நூறு பேர் தலா ஒரு உருபாய் (இன்றைய மதிப்பீட்டில் ஒரு உருபாய் 1000 பெறும்) மொய் எழுதியுள்ளார்கள். இதை பார்க்கும் போது நாவிதர்களின் அன்றைய சமூக நிலைபடியை கூர்ந்து கவனிக்க தோன்றுகிறது.இப்படி தேர்ந்த ஆய்வாளர்களுக்குறிய தேடுதல் தரவுகளை இந்நூல் தாங்கியுள்ளது.இது போன்ற நூல்களை தமிழக அரசு ஊக்குவிப்பதற்கு முன்பு இந்த மாணவர்களை தமிழக முதல்வரே நேரில் அழைத்து பாரட்ட வேண்டும்.
இந்த நூலினை பெற ஆசிரியர் ராஜகுரு 9944978282, 8012023745 தொடபு கொள்ளலாம் என நூலில் அறிவித்துள்ளார்கள்.
Top of Form
Bottom of Form

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...