Search This Blog

Friday 31 May 2019

சூற்றுச்சூழல் மாசு என்பது பொய்யான வாதமே?

                         


                        சூற்றுச்சூழல் மாசு என்பது பொய்யான வாதமே?


கடந்த சில ஆண்டுகளாக நமது இந்திய துணைக் கண்டம் எங்கும்  சூழலியல் பேச்சாகவே கேட்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தாது வளங்களைப் பயன்படுத்துதல் என்பது கடந்த காலங்களில் தேவை கருந்தியே இருந்துள்ளது.
.
காடு அதுனுள் இருக்கும் கனிம வளங்கள், இதை கொடுமணல் ஆய்விலும் ரோமானிய தொடர்புடைய வணிய ஆய்வில், கனிம தாதுகளை இந்திய துணைக் கண்டத்தில் உள்ள தமிழகம் கனிமம் உலகம் முழுவதும் பரவியுள்ளதிய உறுதி செய்ய முடிகிறது.
அடுத்து வனம் இதனை எந்தத் தனிமனிதனாலும் அழித்திட முடியவே முடியாது. அரசால் மட்டுமே அழிக்க முடியும். தற்போது சுற்றுச்சூழல் பேசுபவர்கள் சொல்லுவ்வது போல் ஆனை வழித்தடம் பூனை வழித்தடமெல்லாம் நம்மை கேனக்கிறுக்கனாக்கும் வேலை.  தமிழகத்தில் நாயக்கர் ஆட்சில் குடியேற்றப்பட்ட விஜயநகர திராவிட குடிகளுக்காக  பெரும்பான்மை காடுகளை அழித்து விளைநிலமாக்கப்பட்டது. இதனை அடுத்து இந்திய துணைக் கண்டத்தையும் அதனை தாண்டியும் ஆட்சி செய்த பிரிட்டீஷ் அரசு மிச்ச மீதம் இருந்த வனங்களை அழித்து தேயிலை, காபி, கொக்கோ பயிரிட்டார்கள். சுதந்தர இந்தியாவில் பிரதமராக இருந்த மறைந்த இந்திராகாந்தி அவர்கள் கொஞ்சநஞ்சமிருந்த காடுகளையும் 'கூப்' விட்டு மொட்டையடித்தார். ஆக, காடுகள் அழியத் துவங்கியது சுமார் 250 ஆண்டுகளு முன்பிருந்து என்பதை மறந்து விடவேண்டாம். இந்த அழிக்கப்பட்ட வனத்தை வனமாக்கிட சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் அழிந்த காட்டுக்குல் மனிதன் காலடி படாமல் காத்திருக்க வேண்டும். இது இயலுமா எனத் தெரியவில்லை.

சாயப்பட்டரை;
 
1667ல் இந்திய துணைக் கண்டத்தில் சாயம் காய்ச்சுதல் டச்சுக்காரர்கள் மூலம் திருபரிதிரிபூலியூர் கடற்கரையில் சாயப்பட்டரை துவங்கினார்கள். அதற்கு முன்பு தமிழன் அழகான வெள்ளை ஆடையே பயன்படுத்தி வந்தான். பட்டு நூல்களுக்கு தேவையான சாயங்கள் குறைந்தளவே பயன்படுத்தப்பட்டது. புழகத்தில் அதிகமாக வெள்ளை ஆடை இருந்ததால் என்னவோ வண்ணார் என அழைப்படும் ஏகாலி குலத்தினர் அழுக்கை கூட வெள்ளை என்ற அழகு சொல் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் வண்ணம் காய்ச்சும் தொழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததற்கான சான்றுகள் ஆதிச்சநல்லூரிலும் கிடைத்துள்ளது. இந்திய துணைக் கண்டத்தில் சாயம் என்பது மிகமிகக் குறைவான மக்களுக்கு மட்டுமே பயன்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
17ம் நூற்றாண்டிற்கு பின்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்ட தொழில் புரட்சி உலகத்தை மாற்றியது. முதலாளிகள் உற்பத்தியை நம்மிடம் விற்று தீர்த்திட ஒவ்வொரு தனிமனிதனையும் நுகர்வாளராக மாற்றிவிட்டான். இதன் தாக்கத்திற்கு முதல் அடிவாங்கியது இந்தியத் துணைக்கண்டம். இதன் தொடர்ச்சியாக உலகத்தில் உள்ள மானுட குழுக்களுக்கு, அழகில் சாதனங்களில் குறிப்பாக அழகிய வண்ண ஆடை தயாரிக்கும் தளமாக இந்தியா மாறிவிட்டது என்பதை விட ஆளும் அரசுகள் மாற்றி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த கேட்டினை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றவர் மறைந்த பிரதரமர் திரு.ராசீவுகாந்தி. இன்றைய இந்துத்துவ அமைப்பில் மைய புள்ளிகளாக உள்ள சிந்தியா அரச குடும்ப, குழுமத்தினரின் நிறுவனமான விமல் காட்டன் நிறுவனத்திற்கே சாயப்பட்டரை அனுமதியை வழங்கினார் திரு. ராசீவ்காந்தி. இதன் நீட்சியே இன்றைய கேடுகள். தொழில் புரட்சி கண்ட ஐரோப்பிய ஒன்றியம் சாயம் காய்ச்ச தெரியாத என்ன.  சாயத்தை ஏன் இந்தியத் துணைக் கண்டத்தில் காய்ச்சுகிறார்கள்.  'நம்ம ஊரில தொழில் வளமில்ல' இந்த இழிச்ச பதிலை எல்லோர் மூலையிலும் நுழைத்து விட்டார்கள் என்பதே இதற்கு  விடை யான பதில். 
தாது பொருள் சுத்திகரிப்பு; 

பெரிதாக பேசப்பட்டு பல உயிர்களை காவுவாங்கிய தூத்துகுடி தாமிரத்தாது சுத்திகரிப்பு மய்யம். அது வெட்டி எடுக்கப்படுவது உக்கரைன், மத்திய சீனம். தாமிரத்தாதுவை சுத்திகரித்து பாத்திரமாக, வீட்டு அழங்காரப் பொருளாக, இசை கருவிக்காக, மின்னனு சாதனமாக, மோட்டர்வாகன உதிரிப்பாகமாக, விமான உள் பாகங்களாக பல்லாண்டுகள் கெட்டுபோகாத பொருளாக உள்ள அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தாதுவை இலக்கிட தேவையான சல்பூரிக், நைட்ரின் அமிலங்கள் மத்திய சீன நாட்டிலே கிடைக்கிறது. இவைகளை ஏன் அந்த நாடுகளில் செய்ய முடியவில்லை என்ற கேள்விக்கும் 'நம்ம ஊரில தொழில் வளமில்ல' என்ற பதிலை சொல்லுகிறார்கள்.

அடுத்து சீன நாட்டில் கொட்டிக் கிடக்கும் கெந்தகம், பாதசம், வெடியுப்பு. இவைகளே பெரும்பாலனா உயிர் காக்கும் மருந்துகளின் மூலப்பொருள்கள். இவைகளை உயிர் காக்கும் மருந்துகளாக்க மும்பை கொல்கத்தா, ஓடிசா கடற்கரையிலும் சீர்கெடுகிறது என்பது இந்த சூற்றுச்சூழல்வாதிகளுக்கு? தெரியாதா என்ன. சரி விசயத்துக்கு நேருக்கு நேராக வருவோம் இருகிற வச்சு வாழ முடியுமா ? முடியாத ? இந்தக் கேள்விக்கு கடந்த கால பஞ்சங்களும் வேலைவாய்ப்பு இன்மையும் நமக்கு பாடமாக இருக்கிறதே. இந்த பாடம் என்பது நமக்கு பொய்யாக கட்டமைக்கப்பட்டது என்றால் அதற்கான மாற்றை பரிசாத்தியமான முறையில் செய்து காட்டிட வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...