Search This Blog

Friday 12 June 2020

சமூக இணக்கத்தின் வெளிப்பாடு





                            சமூக இணக்கத்தின் வெளிப்பாடு      

#########################################################################################                                                  வழிபாடு?

*******************************************************************************************************

வணக்கம் நண்பர்களே தோழர்களே,

மனிர்களுக்குள் சண்டை சச்சரவு வந்தாலும் குலங்களுக்குள் ஒற்றுமையை நிலைநாட்ட கடவுளை சாட்சியாக வைத்து வாழ்ந்து வந்தார்கள். சில பகுதியில் இந்த ஒற்றுமை இன்னும் சாகாமல் இருந்தும் வருகிறது. இதற்கு பல நூறு சான்றுகள் உள்ளன. மதுரை மாவட்டம் செக்கணூர்ணி அருகிலுள்ள கொக்குலம் கிராமத்தில் உள்ள பேக்கருப்பசாமி கோயிலில் பறையர் குலத்தினரே பூசாரி. இக்கோயிலில் வழிப்பாட்டாளர்கள் பிறமலை கள்ளர் குலத்தினரே. அதே போல் பள்ள கருப்பசாமி கோயிலில் பள்ளர் குலத்தினர் விபூதி கொடுப்பவராக உள்ளனர். சில கிராமங்களில் பிற்படுத்தபட்டோர்களான கள்ளர், கோனார் சமூகத்தினர் பள்ளர், பறையர் குலத்தினரோடு மாமன் மைத்துனர் பங்காளி முறை வைத்து அழைக்கும் பழக்கம் உண்டு. ஆனால் பெண் எடுப்பது கொடுப்பது இல்லை.  

தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஒரு பகுதியான உத்தமபுரத்தில் வாழும் கோனார் சமூகத்தினர் கம்பத்தில் உள்ள ஒக்கலிய காப்பிலியர் சமூகத்தின் ஒரு பிரிவுடன் பங்காளி உறவு வைத்துள்ளனர். உழுகுடிகளாக பள்ளர் குலத்தினர் அதிகமாக உள்ள கிராமத்தில் வசிக்கும் ஆசாரிகளுடன் அப்பன் மகன் உறவு உள்ளது. இசுலாமிய சமூகத்தினருடன் திராவிட குடிகளாக நாயக்கர், பிறமலை கள்ளர், கோனார் சமூகத்தினர் மைத்துனர் உறவு முறையும் பள்ளர் பறையர் சமூகத்தினருடன் பங்காளி முறையும் இருப்பதை கிராமங்களில் பார்க்க முடியும்.  

தேனி மாவட்டமும் திண்டுக்கல் மாவட்டமும் இணையும் இடமான அ.வாடிப்படிப்பட்டி கிராமத்தில் கம்பளத்து நாயக்கரில் ஒரு பிரிவினருக்குறிய கோயிலில் பள்ளர் குலத்தில் பிறந்த ஒருவரை தெய்வமாக வழிபடும் பழக்கம் இன்றும் உள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட காந்தி கிராமிய பல்கலை கழக பேராசிரியர் முனைவர் முத்தையாவிடம் பேசினோம்.



''கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் கருநாடகப்பகுதியிலிருந்து இங்கு வரும் போது அரவக்குறிச்சி மலையில் உற்பத்தியாகும் மலட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளம் வடிந்த பின்னால் தங்கள் கொண்டு வந்த பொதிமாட்டு வண்டியை ஆற்ற்றில் இறக்கினார்கள். காட்டாறு வெள்ளத்தில் ஆற்றில் மணலுக்கடியில் சகதி அதிகமாக இருந்ததால் வண்டி சிக்கியது. அருகிலிருந்த பள்ள குடும்பன் தலைமையிலான பள்ளர் குல மக்கள் நாயக்கர்களுக்கு உதவியுள்ளார். அப்போது வண்டி மேடேறும் போது எப்படியோ பள்ள குடும்பன் இறந்து விடுகிறார். அவருடையை உறவினர்கள் பள்ள குடும்பனை அடக்கம் செய்கிறார்கள். தங்களை காப்பாற்றி உயிர் விட்ட பள்ள குடும்பன் நினைவாக அவரது கால் தடம் பட்ட மண்ணை எடுத்து வந்து அவர்கள் தங்கி இடமான வாடிப்பட்டியில் வழிபட்டுள்ளார்கள். காலப்போக்கில் இவர்களது மூதாதையர்களும் இறந்து விட அவர்களுடன் சேர்த்து பள்ளகுடும்பனையும் வழிபடுகிறார்கள். இந்த கம்மளத்து நாயக்கர்களில் பிரிந்து சென்று தென் மாவட்டங்களில் குடியேறிய குழுக்களும் பள்ள குடும்பன் பிடிமண்ணை எடுத்து சென்று அங்கும் வழிபடுகிறார்கள்'' எனச்சொன்னார்.

கம்பளத்து நாயக்கர் தொன்மம் குறித்து முனைவர் பட்டம் பெற்ற யாதவர் கல்லூரி பேராசிரியர் பாலுச்சாமியிடம் பேசினோம் ''வடக்கிருந்து வந்த நாயக்கர் குழுவிற்கு ஆவுலுசித்து என்பவர் தலைவராக இருந்து வழி நடத்தி வந்துள்ளார். அவரே மாடுகளை பழக்கும் தலைவர். இவரது நினைவாக இன்னும் ஆவுலு, ஆவுலுசித்து, சித்தாவுலு என கம்பளத்து நாயக்கர் குலத்தினர் பெயர் வைக்கிறார்கள்'' என்ற தகவலை சொன்னார்.

குலங்களுக்குள் நடந்த நிலப்பறிப்பு, அதிகார மேல்நிலையாக்கம், குலப்புனிதம் இவைகளால் குல மோதல்கள் ஆண்டாண்டுகாலமாக இறுக்க நிலையுடன் நிடிக்கிறது. ஆனால் ஒற்றுமையின் தொன்மங்கள் மட்டும் இன்னும் சாகாமல் வழிப்பாட்டாக உள்ளது.  

2 comments:

  1. ஆக எல்லாப் பயலும் ஒண்ணுதாங்கிறீக.ஒத்துக்கமாட்டாங்களே சுல்தான்

    ReplyDelete
  2. சமூக இணக்கத்தின் வெளிப்பாடு - படித்தேன். Font Size பெரிதாக இருக்க வேண்டும். பின் புலம் வெள்ளையாகவும், அச்சு கறுப்பிலும் இருக்க வேண்டும். கலர் மீது அச்சு இருந்தால் என்னைப் போன்ற முதியவர்களுக்கு படிப்பதில் சிரமமாக இருக்கிறது. அருமையான, தகவல்கள் அடங்கிய பதிவு. நன்றி.

    ReplyDelete

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...