Search This Blog

Monday 8 June 2020

பகதூர் ஷா ஜாபாரும் மதசார்பின்மையும்

 
                                                             விடுதலைப்போர்
 
செ.சண்முகசுந்தரம்

சிப்பாய் எழுச்சியில்(முதல் இந்திய சுதந்திரப் போரில்) பங்குகொண்ட சிப்பாய்களில் பெரும்பாலானோர் உயர்சாதி இந்துக்களாக இருந்தபோதிலும், ஏன் முகலாயப் பேரரசின் கடைசி மன்னனான பகதூர் ஷா ஜாபரிடம் போய் நின்றார்கள் என்று தெரியுமா உங்களுக்கு? இதற்கு விடை தெரியவேண்டுமானால் பகதூர் ஷா ஜாபரின் மதச்சார்பற்ற தன்மை குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். பகதூர்ஷா கவித்துவ உள்ளம் கொண்ட ஒரு கவிஞர். மதசார்பற்றவர். சூஃபி ஞானி. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியை தன் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தவர். இந்துக்களைக் காப்பற்றியவர். தீவிரவாத‌ இஸ்லாமியர்களின் கோரிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கும் ஒருபோதும் பலியாகாதவர். ஒரு சமயம் ஒரு இந்து, ஜாபரின் பிரதம மந்திரியான ஹப்பிம் ஹஸனுல்லாகான் மூலமாக தான் ஒரு இஸ்லாமியராக மாறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது, அந்த இந்துவை அரண்மனையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். மற்றொரு சமயத்தில் 200 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அரண்மனைக்கு முன்கூடி ஈத் பண்டிகை அன்று பசுவதை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது, இஸ்லாமியர்களின் மதம் பசுவதையை வேண்டி நிற்கவில்லை என்று பதில் தந்தார். சன்னி பிரிவைச் சார்ந்த ஜாபர், ஷியா பிரிவினரின் பண்டிகையான முகரத்தை அரண்மனையில் கொண்டாடினார். ஜாபரின் அரண்மனை மருத்துவரான சாமன்லால் கிறித்துவ மதத்திற்கு மாறியபோது, உலமாக்கள் அவரை அரண்மனையில் இருந்து நீக்கக் கோரினர். மருத்துவரின் மத நம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது எனக் கூறி அக்கோரிக்கையை அவர் நிராகரித்தார். ஒரு இஸ்லாமிய அரசில் உண்மையான மதச்சார்பற்றத் தன்மையை பின்பற்றியவர்.
ஆனால் 21ம் நூற்றாண்டு நவீன இந்துத்வ ஜனநாயக அரசில், இஸ்லாமியர்கள் தங்கள் பெயரைச் சொன்னால், தொப்பி அணிந்து சென்றால் துப்பாக்கிச் சூடும், அடி உதைகளும் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...