Search This Blog

Monday 8 June 2020

கனிம வளக் காவலர்கள்?

                            

                                      கனிம வளக் காவலர்கள்?
                          *************************************

இந்தியாவை ஆண்ட பிரிட்டீசார் கனிம வளங்கள் இங்கு கொட்டிக்கிடப்பதை குறிப்பாக அகத்தியர் மலையில் இருப்பதை கண்டறிந்தவர் மொழி அறிஞராக அறியப்படும் திரு. சி.யூ. போப். அவர் தான் தாது மணலை கண்டறிந்தார். அதன் நீட்சியே ஆளும் ஆண்ட அரசுளின் தாது திருட்டு. 

இதே போல் அகத்தியர் மலை என அறியப்படும் மேற்குத்தொடர்ச்சி மலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என ஏசு சபை பாதிரியார் ஆல்வேரேஜ் குறிப்பிட்டு 'இந்த மலைகளில் வைரமும் வைடூரியமும், கொட்டிக்கிட்கிறது' என தமிழக மக்களின் பட்டறிவை வைத்து குறிப்பெழுதியுள்ளார். அதன் பின் ஜியலாஸ்ட் விஞ்ஞானி வி . பில் என்பவர் மூலம் ஆய்வு செய்து இந்தியன் எக்கானாமி ஆப் நேட்சுரல் சோர்ஸ் என்ற அறிக்கை தாக்கல் செய்தார். இந்த வளங்களை கொள்ளையடித்திடவே, (காட் டங்கல், தற்போது WTO) ஒப்பந்தந்தத் திட்டத்தில், பன்மொழிப் புலவன் மறைந்த பிரதமர் திரு. நரசிம்மராவும், உலக பொருளாதார நிபுணன் முனைவர் முன்னால் பிரதமர் திரு. மன்மோகன்சிங்கும் கைரேகை வைத்து வேதாந்தா நிறுவனத்தை உலகளவில் புரொமோட் செய்தார்கள். 

தமிழகத்தை ஆண்ட நாயக்கர் அரசு அழித்த காடுகளின் மிச்ச மீதியை பிரிட்டீஷார் அழித்தனர். இனி காட் மூலம் உலகமுழுவதும் உள்ள சனங்களுக்காக இந்திய ஒன்றியத்தில் உள்ள அரசு துப்பாக்கி முனையில் அழிக்கும். எம் தோழர்கள் மட்டுமே உயிர்பலியாவார்கள். 

இந்திய துணைக்கண்டத்தில் நடந்த தேர்தல்களில் கட்சிகளின் அறிக்கையை படித்துப்பாருங்கள் அனைத்து கட்சியும் ஒரே மாதிரியாக 'தொழில் வளர்ச்சி' என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே விதவிதமான வார்த்தைச் சொல்லாடல்களை பயன்படுத்தி நூறு பக்கங்களை நிரப்பி இருப்பார்கள். இந்த தொழில் வளர்ச்சின் உச்சம் தான் தூத்துக்குடி தாமிர தொழில்சாலை போராட்ட களத்தில் சாவு. 

கொடைக்கானலில் தமிழக முதல்வர் மறைந்த திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் பாதரசம் மூலம் தயாரிக்கப்படும் தெர்மல் குடுவை தாயாரிப்பு நிறுவனம் துவக்கப்பட்டது. உலமே தடை செய்ததை மறைந்த பிரதமர் இந்திராகாந்தி எம்.ஜி. இராமச்சந்திரன்  கூட்டுடன் துவக்கப்பட்டது. 

சிறுமுகை விஸ்காஸ் நிறுவனத்தின் செயற்கை சாயப்பட்டரை, திரு. இராசீவுகாந்தி அவர்கள் புண்ணியத்தில் நர்மதை ஆற்றங்கரையில் திரு. சிந்தியா குடும்பத்தாரின் விமல் காட்டன் சில்க்ஸ் சாய பட்டரை இப்படி பட்டியல் போடலாம். இவை இந்திய பொருளதாரத்தையும், நமது மக்களுக்கும் எந்தளவுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தது என்ற புள்ளிவிபரம் 05% விழுக்காடு கூட பயன்தரும்படியாக இல்லை. 

கிராமப் பொருளாதரத்தை மறு கட்டமை செய்திட வேண்டிய கட்டாயத் தேவை இந்திய ஒன்றியத்திற்கு தற்போதய தேவையாக இருக்கிறது. கிராம பொருளாதரம் என்றவுடன் காந்திய பொருளாதாரம் என ஒதுக்கிவிடாமல் அதை ஒத்திசையுள்ள கருத்துக்களை கையில் எடுக்க வேண்டிய தேவையுள்ளது.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...