Search This Blog

Saturday 12 June 2021

நளிர் காய்ச்சலும் சித்த மருத்துவமும்

 

                                          நளிர் காய்ச்சலும் சித்த மருத்துவமும்

____________________________________________________________________________________________

 

 

               நளிர் காய்ச்சல் -  காய்ச்சலால் வரும் *மனக்கோட்டம்* என்ற சொல்லால் இதை சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. கோட்டம் - சிறை என்ற பொருளிலே இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் என நம்பலாம். சித்த மருத்துவத்தில் சமற்கிருத கலப்பால் சன்னிகோட்டம் என்றும் தோஷம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். நளிர் காய்ச்சல் கண்டால் நாடி மூன்றும் தன்நிலை மறந்து விருப்பம் போல் *ஏற்றம் இறக்கம்* கண்டு உடலை ஒருநிலை கொள்ளாது இறப்பைக்கொடுக்கும். இதைத்தான் நவீன மருத்துவத்தில் ஆக்ஸிசன் அளவு குறித்து தற்போது பொது வெளியில் பேசப்படுகிறது. இறப்பை தடுக்க பல வகையில் நவீன மருத்துவ உலகம் போராடி வந்தாலும் இறப்பு தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளதாகவே செய்திகள் வருகிறது. இந்த நளிர் காய்ச்சலுக்கு சித்தமருத்துவத்தில் மருத்தும் இருந்தும் அரசு பயன்படுத்த மறுப்பது சித்தமருத்துவர்களின் குறைபாட்டுதானா? அல்லது நவீன மருத்துவத்தை இயக்கும் பெரும் முதலாளிதள் தடுக்கிறார்களா? யாரின் குறைபாடு

 

நளிர் காய்ச்சல் கோட்டம் சன்னி தோசம் தீர,

மருந்தின் பெயர்; வைர குளிகை

பத்தியம்; அகபத்தியம், உப்பு சங்கம் இலையில் வறுத்து பயன்படுத்தவும். புளி நீக்கவும்

மருந்து செய்முறை; திரிகடுகு, சாதிலிங்கம் (சுத்தி செய்திடவும்) வரகன் எடை 1 பெருங்காயம் வரகன் எடை 2 வெண்காரம் (சுத்தி) வரகன் 7 இவைகளை எழுமிசை சாற்றில் 4 சாமம் அரைத்து (8மணி நேரம்) துவரம் பருப்பு வீதம் குளிகை செய்து நிழலில் காயவைத்து சீசாவில் சேமிக்கவும்.  

மருந்து சாப்பிடும் முறை;  இஞ்சி, அமிர்தபால், இராங்காயம் சாறு 10 மில்லி அளவு எடுத்து ஒரு மாத்திரையை மூன்று உரசி கொடுக்க சன்னி தீரும். தேனில் கொடுக்க மூன்று நாடிகளும் மாறி மாறி ஓடி உடலில் ஆக்ஸிசன் அளவை குறைத்திடும் தோசம் தீரும்.

வைர கோடாரி குளிகை

இதிலும் தீராது முறைகாய்ச்சல் என்ற விட்டு விட்டு மாலை நேரத்தில் மட்டும் காய்ச்சல் கண்டு நாடி கோட்டம் கண்டால் வைரகோடாரி குளுவை கொடுக்க வேண்டும். வைர கோடாரி குளுவை செய்முறை கௌரிபாசாணம், வெள்ளை பாசாணம், தாளகம், லிங்கம், வங்காரபச்சை, ரசம், கந்தகம், வெங்காரம் இவைகளை முறைப்படி சுத்தி செய்து, இரண்டு வரகன் எடை அளவு எடுத்து, அக்ராகாரம், சுக்கு, திப்பிளி, தாமரை கிழங்கு, நீர் வளம் (நீர் வளம் - சுத்தி செய்திடவும்), தாண்றிகாய், நெல்லிக்காய், கடுக்காய் இவைகள் இரண்டு வரகன் எடை அளவு எடுத்து இடித்து துணியால் சளித்து நொச்சி இலை சாறு, தாமரை இலைச்சாறு, துளசி சாறு, இவைகள் தலா ஒரு நாளிற்கு ஒரு சாமன் கணக்கிற்கு அரவை செய்து நான்காம் நாள் 100 வெற்றிலை 100 பாக்கு இவைகளை இடித்து சாறு பிழிந்து அதை இரண்டு நாள் கணக்கிற்கு ஆறு சாமம் அரவை செய்து இறுதியாக வெள்ளாட்டம் பாலில் அரைவை செய்து குண்டுமணி அளவு குளுவை செய்து நிழலில் ஒருவாரம் உலரவைத்து கண்ணாடி புட்டியில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.

 

இந்தமருந்தினை மருத்துவர் அல்லாது சிறந்த அனுபவம் இல்லாதவர்கள் செய்திட இயலாது என்பதை விட கூடாது என்பதே எனது திடமான எண்ணம்.

 

இந்த மாத்திரை கண்புரை, காய்ச்சல், இருமல், சளியுடன் இருமல், பைத்தியம், சொறி, மண்டை பேய் சொறி, வயிற்று வலி குன்னம், சூலை என்ற வீக்கத்துடன் அல்லது வீக்கமில்லாத வலி, தலைப்பாரம், உடல் சூடு, உடல் எரிச்சல்,கடும் காய்ச்சல், முறைக்காய்ச்சல், வயிற்று போக்கு, வயிற்று கடுப்பு, தாது விருத்தி என பல நோய்களுக்கு அனுப்பானமாக இந்த மருத்தை கொடுக்க வேண்டும்.

 

இம்மருந்தினை நவீன மருத்துவ மாத்திரைகள் போல் சுடு நீரிலோ அல்லது தண்ணீரிலோ போட்டு உண்ண இயலாது. இதுவே இதன் சிக்கல் மருந்தினை அனுப்பானத்துடன் சேர்ந்து சாப்பிடும் போது தான் மருந்து வேலை செய்திடும்.

உடலில் ஆக்ஸிசன் குறித்து தற்போது தான் பொது வெளியில் பேசுகிறார்கள். இந்த அளவு குறைந்தால் நாடி ஓட்டம் படுத்துக்கொள்ளும் அதாவது அரணைபோல் அதாவது நாடி ஓடுவதை கண்டறிவது மிகக்கடினம். நாடியினை கணப்பொழுதில் உடனடியாக எழுப்பி துரித நிலைக்கு கொண்டு வந்திடும் தன்மை கொண்டது இந்த மருந்து என்பது பல அனுபவ சித்த மருத்துவர்கள் சொல்லியுள்ளதையும் நேரிலும் கண்டுள்ளேன்.

 


இந்த மருதினை மைய, மாநில அரசின் கீழ் இயங்கும் சித்தமருத்துவத்துறைக்கு கீழ் இயங்கும் சித்தமருத்துவ கல்லூரிகளில் பாடமாக வைத்துள்ளார்கள். ஆனால் படித்த மருத்துவர்கள் யாரும் இந்த மருந்தை மட்டும் அல்லாது தாது மருந்துகளை பரிந்துரைத்ததோ அல்லது செய்து நோயாளிக்களுக்கு கொடுத்ததோ கவனப்படவில்லை. காரணம் இவர்கள் சித்தமருத்துவம் மீது நம்பிக்கை அற்றவர்களோ என்ற ஐயப்பாடு எனக்கு உண்டு.

படித்த மருத்துவர்கள் நாடி பார்ப்பதை பழகிட மறுக்கிறார்கள். நாடி பார்க்க தெரிந்தால் உடலில் உள்ள ஆக்ஸிசன் அளவை எளிதாக புரிந்து கொள்ள இயலும் என்பதைக்கூட கவனப்படுத்தாமல் உடலில் ஆக்ஸிசன் கணக்கிடும் மானியை நாடுகிறார்கள். இக்கருவி நளிர் காய்ச்சலும் கண்டவர்களுக்கு துள்ளிதமாக கணக்கிடவில்லை என்பதை எனது அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.

 

Harihara Mahadevan சித்த மருத்துவ மைய அரசின் விஞ்ஞானி

 **********************************************************

                தங்கம் சேர்ந்த பூர்ணசந்திரோதயமும், தாளகம் சேர்ந்த மருந்துகளும் தான் கபசுரத்திற்காக சித்தர் நூல்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் எப்படி நோய்நிலையில் செயலாற்ற வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து கொள்வதற்கு முன், கொரானா தொற்றால் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

 

                 கோவிட் தொற்றில் கிருமியால் நேரிடையாக ஏற்படும் பாதிப்பு என்பது குறைவு மறைமுக பாதிப்புகளே அதிகம். தொற்று ஏற்பட்ட பின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக செயல்படுவதால் இறப்பு ஏற்படும் அளவுக்கான பாதிப்பை உண்டாக்கி விடுகிறது. சுருக்கமாக சொன்னால் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது.

 

          நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட செயல்பாட்டுடன் தனது வேலையை நிறுத்தி கொள்ள வேண்டும். வைரஸ் உள்ளே நுழைந்த உடன் வைரசுக்கு எதிராக செயல்படும் நோயெதிர்ப்பு சக்தி, Inflammatory mediators என்னும் உடல்வேதியியல் பொருட்களை உருவாக்குகின்றது. இந்த Inflammatory mediators என்பது பல வேதியியல் கூறுகளை உள்ளடக்கியது. அவை தாங்கள் செயல்படுவதற்கான காலகட்டத்தையும் தாண்டி செயலாற்றுவதால் உடலுக்கு ( குறிப்பாக நுரையீரலுக்கு) பாதிப்பை ஏற்படுத்துகிறது. மற்றொரு பக்கம், பைத்திய பிடித்த உடலின் நோயெதிர்ப்பு சக்தி வைரசை விட்டு விட்டு உடலின் செல்களையே காட்டுமிராண்டித்தனமாக தாக்க தொடங்குகிறது.

 

             இதற்கு நவீன மருத்துவமுறையில் இந்த நோய்நிலையை கட்டுப்படுத்த *ஸ்டீராய்டுகள்* பயன்படுகிறது. ஸ்டீராய்டுகள் நோயெதிர்ப்பு சக்திக்கு கடிவாளம் போடுவதோடு நிற்பதில்லை. அது நோயெதிர்ப்பு சக்திக்கு ஒரு போலீஸ் ட்ரீர்மெண்ட் கொடுக்கிறது.நோயெதிர்ப்பு சக்தியை அடக்கி ஒடுக்கி அதன் செயல்பாட்டை குறைத்த பின் நோய் கட்டுக்குள் வருகிறது. நோய் குறைந்த பின் ஸ்டீராய்டுகளின் அளவு படிப்படியாக குறைத்து பின்னர் நிறுத்தப்படும். நோயெதிர்ப்பு சக்தியை இப்படி மட்டுப்படுத்தி வைப்பதால், பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. வேறு பல பாக்டீரியாக்கள் உடலில் எளிதாக பல்கி பெருகும் சூழல் உருவாகும். ஆனால் உயிரை காப்பாற்ற வேண்டுமானால் ஸ்டீராய்டுகள் மிக்க அவசியம். இந்த பக்கவிளைவுகள், வேறு பாதிப்புகள் இல்லாமல் நோயை குணமாக்க என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. Inflammatory mediators, நோயெதிர்ப்பு சக்தி என்று பொத்தாம் பொதுவாக கூறினாலும் கொஞ்சம் ஆழமாக ஆய்வு செய்தால் Inflammatory mediators இன் ஒவ்வொரு கூறும் ஒவ்வொரு விதமாக செயலாற்றுவதை அறிந்து கொள்ளலாம். குறிப்பாக Inflammatory mediators இல் ஒன்றான TGF Beta என்ற உடல் வேதியியல் கூறு நுரையீரலில் செயல்பட்டு, பஞ்சு போல உள்ள நுரையீரல் செல்களை தேங்காய் நார் போல கடினமாக மாற்றுகிறது. நுரையீரல் இப்படி கடினமாக மாறிய இடங்களில் காற்று பரிமாற்றம் நடப்பது இல்லை. பாதிப்புகள் அதிகமாக நடக்கும் போது ஆக்சிஜனை உடலுக்குள் கிரகித்து கொள்ள முடியாமல், நுரையீரல் தடுமாறுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதால், மேலும் மேலும் செயல்பட நுரையீரலுக்கு உடல் சமிக்ஞைகளை அனுப்புகிறது. கொடுத்த Targetஐ முடிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கும் விற்பனை நிர்வாகி புதிதாக மேலாளர் ஒரு target கொடுத்தால் எப்படி திணறுவாரோ அது போல் நுரையீரல் திணறுகிறது. மூச்சு திணறுகிறது. இந்தப்பாதிப்புகள் எல்லாம் நடக்காமல் தவிர்க்க வேண்டுமென்றால் TGF Beta வின் செயல்பாட்டை கட்டுபடுத்த வேண்டும். அதற்கு என்ன மருந்தை பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் விட்டத்தை பார்த்து சிந்தித்து கொண்டிருந்த போது கண நேர சிந்தனையில் உதித்தது மருந்து தான் Arsenic trioxide.

 

              சித்த மருத்துவத்தில் கபசுரத்திற்கு சித்தர்களால் பரிந்துரைக்கப்படும் அதே Arsenic குடும்பத்தை சேர்ந்த (தாளகம், மனோசிலை) மருந்து தான். ஹோமியோபதி மருத்துவத்தில் கோவிட் நோய்க்கு பரிந்துரைக்கப்படும் Arsenicum album இதன் நெருங்கிய உறவினர். கோவிட் தொற்றில் நுரையீரலில் என்ன பாதிப்பு ஏற்படுகிறதோ, அதே வகையான பாதிப்பு தான் Idiopathic Pulmonary Fibrosis என்ற நோய் நிலையில் நுரையீரலுக்கு TGF Beta என்ற உடல் வேதியியல் கூறால் ஏற்படுகிறது. இந்த TGF Beta வை கட்டுப்படுத்துவதில் Arsenic trioxide நன்றாக செயலாற்றுகிறது என்று 2014 ஆம் ஆண்டே ஆய்வு முடிவுகள் அமெரிக்காவில் இருந்து வெளிவந்து விட்டது. எனவே Arsenic trioxide ஐ கோவிட் பாதிப்பில் TGF Beta வை கட்டுப்படுத்தி நுரையீரல் பாதிப்பை குறைக்கலாமே என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை திட்டமிடுகின்றனர். தாளகம், மனோசிலை முதலிய பாடாணங்கள் பற்றி பேசும் போதெல்லாம் “Arsenic trioxide எவ்வளவு பெரிய விசம், இதெல்லாம் கொடுக்கிறது தப்பு இல்லையா?” என்று  குரல் கொடுப்பவர்கள் சித்த மருத்துவத்திற்கு ஆய்வு இல்லை என கூக்குரலிட்டு மருந்தை புறம் தள்ளுகிறார்கள்.

 

 

                 Arsenic சேர்ந்த மருந்துகள் என்பது சித்த மருத்துவத்தில் காலம் காலமாக பயன்படுத்தப்பட்ட ஒன்று என்பது மட்டுமல்ல, நவீன மருத்துவ அறிவியல் வளர்ச்சியின் பிதாமகன்களான Robert Kouch, Ehlirich ஆகியோர்களால் கையாளப்பட்டு வந்த ஒன்று. Fowlers’ solution என்ற Arsenic சேர்ந்த மருந்து சுரங்களுக்கான மருந்தாக உபயோகத்தில் இருந்தது. பின்னர் leukemia என்ற இரத்தப்புற்று நோய்க்கான மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இதெல்லாம் outdated, பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் அறிவியல் - நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்று தத்துவார்த்தம் பேசுபவர்கள் அறிவியலில் தத்துவார்த்தங்களை விட்டு விட்டு நடப்பிற்கு வருவது நல்லது.

 

                   அறிவியல் சிந்தனைகள் எந்த வரன்முறைக்கும் உட்படுவது இல்லை. மருந்து outdated ஆகி விட்டது என்ற சொல்லாடல் வணிகமயமாக்கப்பட்ட மருந்து உற்பத்தியின் ஓர் சந்தை சார்ந்த சொல்லாடல். ஒரு மருந்து சந்தைக்கு வரும் போது அது வரை புழக்கத்தில் இருந்த ஒன்றை விட சிறப்பாக இருப்பதால் மட்டுமே புதிதாக வந்த மருந்து சந்தையை பிடிப்பது இல்லை. பழைய மருந்தை கிடைக்காமல் செய்வது அல்லது தடை செய்வதுதான் கடந்த கால யுத்தி. எ.காவாக சொன்னால் கருப்பட்டி சந்தையில் இருந்து காணாமல் போனது வெள்ளை சர்க்கரை அதை விட தரம் வாய்ந்தது என்பதால் அல்ல கள் தடை செய்யப்பட்டதிலிருந்து அதன் சாராம்சம் உள்ளது.

 

                Arsenic வரலாறும் இது போன்றதே. மேற்குலகில் இபின் சினா காலகட்டமான பதினோராம் நூற்றாண்டுக்கு பிறகே இது பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் பலகட்ட ஆய்வுகளின் படிநிலைகளுக்கு பின் Salvarsan, Neo - salvarsan போன்ற மருந்துகளாக உருமாற்றம் பெற்றது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான Ehrlich, ஆர்சனிக் சேர்ந்த ‘606’ என்ற மருந்தை Syphilis என்ற பாலியல் நோய்க்கு மருந்தாக பரிந்துரைத்தார். இதில் 606 என்பது அவர் ஆர்சனிக் சேர்ந்த அந்த மருந்தின் வேதியியல் கூறு ஆய்வில் 606 ஆவது முயற்சியாக செய்த ஆய்வின் முயற்சியாக கிடைத்த மருந்து என்பது பொருள். பின்னர் ஆண்டிபயாடிக் மருந்துகளின் வருகையால் ஆர்சனிக் மருந்துகள் வழக்கொழிந்தது. ஆனால் வழக்கொழிந்த எந்த மருந்தும் தன்னுள் ஒரு பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கி வந்துள்ளது என்பதை அறிவியல் உலகம் உணர்ந்துள்ளது.

 

        காய்ச்சல் என்ற சுரத்திற்கான மருந்தாக பயன்பாட்டில் இருந்த Fowlers’ solution வழக்கொழிந்து பல ஆண்டுகளுக்கு பின், promyelotic leukemia என்ற புற்று நோய்க்கான மருந்தாக 1990 ஆம் ஆண்டு சீனாவில் ஆய்வு மூலம் நிறுவப்பட்டது, பின்னர் அமெரிக்காவின் FDA அதை 2001 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு அனுமதித்தது.

 

               ஆர்சனிக் மருந்துகள் உலகம் முழுக்க பயன்பாட்டில் உள்ள ஒன்று. விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற சித்த மருத்துவ கோட்பாட்டின் படி, சித்த மருத்துவ நூல்களின் குறிப்பிடப்பட்ட அளவு, பத்தியத்துடன் தாளகம் சேர்ந்த சித்த மருந்துகளை கோவிட் நோயருக்கு பயன்படுத்துவதால் TGF Beta செயல்பாட்டை கட்டுப்படுத்தி இறப்பை தவிர்க்க முடியும்.

              

 

                   பூர்ணசந்திரோதயம் என்ற சித்த மருந்து கபசுரத்திற்கான மருந்தாக சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பில் உடலில் நோயெதிர்ப்பு சக்தி கட்டுப்பாடு இழந்து உடலின் செல்களுக்கு எதிராக செயல்பட்டு Autoimmune disorder ஒத்த நோய்நிலையை உருவாக்குகிறது. தங்கம் சேர்ந்த மருந்தான பூர்ணசந்திரோதயம் ஏற்கனவே autoimmune disorder வகைப்பாட்டில் வரும் சில வாத நோய்களுக்கு சிறப்பான பலனளிக்கிறது. இதே நோய்நிலையில் நவீனமருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் சில தங்கம் சேர்ந்த மருந்துகள் சில ( Gold compounds), கொரானா பாதிப்புக்கு சிறப்பாக செயல்படுவதாக முதற்கட்ட- preclinical ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே பூர்ணசந்திரோதயம் கபசுரத்திற்கான்/கோவிட் பாதிப்புக்கான மருந்தாக பயன்படுத்துவதை நிறுவ அறிவியல் காரணிகள் உள்ளன.

 

               நாக பற்பம் என்ற மருந்து காசம், இரைப்பு போன்ற நுரையீரல் சார்ந்த நோய்களுக்காக சித்த மருத்துவ நூல்களில் பரிந்துரைக்கப்படுகின்றது. இதன் வேதியியல் கூறு ஆய்வில் இந்த மருந்து Zinc oxide nanoparticles என்று கண்டறியப்பட்டுள்ளது. (நான் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டதால் என்னிடம் இதற்கான தரவுகள் உள்ளன.)

 

               

                   Zinc oxide nano particles உடலில் கொரானா வைரஸ் வேகமாக பரவ உதவும் RNA dependent RNA Polymerase – RdRP என்ற நொதியை ( Enzyme) கட்டுப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. ( கொரானா வைரஸ் தொற்றை முதல் நிலையில் கட்டுப்படுத்தும் Remedesvir என்ற மருந்தும் RdRp ஐ கட்டுப்படுத்தி வைரஸ் தொற்றை குணப்படுத்தும் பணியை செய்கிறது.) எனவே நாகபற்பத்தால் உடலில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

 

 

                  இப்படி கோவிட் நோய்நிலையில் சித்த மருத்துவத்தின் பயன்பாட்டின் தேவையை நிறுவ பல அறிவியல் தரவுகள் உள்ளன. முறையான அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் அதை நிறுவ முடியும். ஆய்வுமுடிவுகளுக்கு காத்திருக்காமல் இந்த அறிவியல் தரவுகள் அடிப்படையில் உயிர்காக்கும் சிகிச்சைக்காக சித்த மருந்துகளை பரிந்துரைக்கவும் முடியும்.

 

 

 

(மருந்தின் பெயர்; வைர குளிகை

நோய் அறிகுறி;

பத்தியம்; அகபத்தியம், உப்பு சங்கம் இலையில் வறுத்து பயன்படுத்தவும். புளி நீக்கவும்

மருந்து செய்முறை; திரிகடுகு, சாதிலிங்கம் (சுத்தி செய்திடவும்) வரகன் எடை 1 பெருங்காயம் வரகன் எடை 2 வெண்காரம் (சுத்தி) வரகன் 7 இவைகளை எழுமிச்சம் சாற்றில் 4 சாமம் அரைத்து (12 மணி நேரம்) துவரம் பருப்பு வீதம் குளிகை செய்து நிழலில் காயவைத்து சீசாவில் சேமிக்கவும்.  

மருந்து சாப்பிடும் முறை;  இஞ்சி, அமிர்தபால், இராங்காயம் சாறு 10 மில்லி அளவு எடுத்து ஒரு மாத்திரையை உரசி கொடுக்க சன்னி தீரும். தேனில் கொடுக்க தோசம் தீரும்.

 

 

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...