Search This Blog

Saturday 12 June 2021

கருத்தடை தேவையா


 

கருத்தடை தேவையா ? அறிவியல் நம்பிக்கையாளர்கள் கவனத்திற்கு
------------------------------------------------------------------------------------------------------------
 
 

பெண் மாதவிடாய் காலத்தை கணக்கிடுதல் நவீன விஞ்ஞானம் சொல்லிக்கொடுத்ததில்லை. இது மானுடம் எங்கெல்லாம் வாழ்கிறதோ அங்கெல்லாம் அறிந்த ஒன்றே.

இந்த மாதவிடாயினை வைத்தே ஆன்மீகம் முகம் கொண்டு ''தள்ளிவைத்தல் ஒதுக்குபுறமாக இருக்க வைத்தல், சாமி வீட்டுக்குள் நுழையாதிருந்தால், பொதுகிணற்றில் தண்ணீர் எடுக்காமல் இருத்தல், கோயிலுக்கு போகாமல் இருந்தல்'' போன்றவை இன்றும் நடைமுறையில் உள்ளன.

இந்தக் கருமுட்டை காலத்தை 26 முதல் 32 நாள் வரை கணக்கிட்டு வைத்திருப்பார்கள். இந்த காலத்தில் கரு உருவாகுதல், முத்துதல், முதிர்ச்சி அடைவதை காலத்தை அறிவியல் நம்பிக்கையாளர்களான படித்த, அறிவியலை படிக்காத அனைத்து தரப்பு பெண்களும் அறிந்து வைத்திருப்பார்கள்.

கருவுறுதல் ஆண்பெண் இணைத்தல் மூலமாக நடைபெறுவது. கரு முத்திய பருவகாலத்தில் இணை சேர்ந்தால் மட்டுமே கருவுறும். மீதி காலங்களில் கருவுறுதல் நடக்காது. மரபு கூறு தன்மையைப்பொறுத்தி சில பெண்கள்கு கால மாறுபாடு இருக்கும். அவை மிக சொற்பமான எண்ணிக்கை என்பதை விட விதிவிலக்கானவர்கள் பட்டியலில்


சேர்க்கலாம்.

திருமணம் நாள் குறிப்பதற்கு முன்பாக மணப்பெண்ணிடம் போய் சில பெண்கள் காது அருகில் பேசிவிட்டு ''புதனோட புதன் எட்டு அடுத்த புதன் பதினாறு'' இப்படி கணக்கை கூட்டிக்கழித்து கரு முத்தும் நாள்களை கணக்கிட்டு அந்த நாள்களில் திருமணம் நாள் குறிக்க சொல்லி விடுவார்கள். இந்த கணக்கீடு அறிவியல் நம்பிக்கையாளர்களிடமும் உண்டு என்பதை மறந்து விடவேண்டாம்.

கருமூட்டை குறித்த கணக்கு அறிந்த மக்களை நேரம் காலம் பார்க்காமல் சிற்றின்ப காம கூத்தாடிகளைப்போல் மடையனாக்கியவர்கள் நாம் என்பதை யார் சொல்லுவார்.

கரு முத்திய நாள்களான ஐந்து முதல் அதிகபட்டம் ஏழு நாட்கள் ஆண் பெண் இணைந்திடாமல் இருந்தால் கருவுறுதலை தவிர்க்கலாம். இந்த அறிவு மக்களிடம் இருந்ததை கருத்தடை என்ற விஞ்ஞானம் என்ற பித்தலாட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை என்ன? என்பதை அறிவியல் நம்பிக்கையாளர்கள் என்றாவது கேட்டதுண்டா?

(புரட்சிக்கவி பாரதிதாசனையோ தந்தை பெரியாரையோ இந்தப்பதிவிற்கு ஜவாப்தாரியாக்கி சண்டைக்கு வந்தால் நாங்கள் எதிர்ப்போம்)


No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...